சர்பாசி என்னும் சர்வாதிகாரச் சட்டம்

வங்கிகளில் கடன் வாங்கி(சொத்துக்களை அடமானம் vaiththu) தொழில் திட்டம் தொடங்கும் தொழில் முனைவோர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் திவாலாகும் பட்சத்தில் (என்.பீ.எ) அவர்களது கடன் தொகைக்கு ஈடான சொத்துக்களை வங்கிகளே விற்று தங்கள் கடன் தொகைகளை பாதுகாப்பாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமையை வழங்கும் சட்டம் தான் சர்பாசி என்னும் பொருளாதாரச் சட்டம். தொழில் முனைவோர் பல்வேறு சமூக பொருளாதார அரசியல் நெருக்கடிகளில் தான் திவாலாகும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர் (சரியாகக் கையாளத் தெரியாமல் மாட்டிக் கொள்பவர்கள் குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கத் தான் செய்கின்றனர்) சரி இந்த சட்டம் எப்படி சர்வாதிகார சட்டம் ஆகின்றது?

தன வாழ்க்கையையே அடமானம் வைத்து ஆபத்துக்களை எதிர்நோக்கி சவால்களைச் சமாளித்து சொத்துப் பத்துக்களை வங்கியிடம் கொடுத்து சமூகக் கடமையாக பலருக்கு வேலை வாய்ப்பளிக்கும் தொழில் முனைவோருக்கு இந்தச் சட்டம் தரும் பாதுகாப்பைப் பார்ப்போம். திவாலாகும் பட்சத்தில் கடனுக்கு ஈடான சொத்துக்களை விற்று வரும் வரும்படியில் அந்த நிறுவனத் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி முதலில் தீர்க்கப்படும். வங்கியின் கடன், வட்டி, குட்டி எல்லாம் கணக்கிடப்பட்டு எடுத்துக்க் கொள்ளப்படும் . ஒருக்கால் ஏதாவது மீதம் இருந்தால் பாவப்பட்ட தொழில் முனைவோருக்கு பிரசாதம் வழங்கப்படும். இல்லை என்றால் அவர் ஒரு முழக் கயிறோ அல்லது ஒரு துளி விஷமோ, கடலோ, மலையோ பார்த்து கதையை முடித்துக் கொள்ளவேண்டியது தான். இல்லையென்றால் எம்.எஸ்.உதயமூர்த்தி, மணிமேகலைப் பிரசுர தன்முனைப்பு புத்தகங்களை கொஞ்ச காலம் படித்து விட்டு அடுத்த ஆட்டம் ஆரம்பிக்கலாம். வழியிருந்தால்..............

No comments: