பிக் பாங் அல்லது பெருவெடிப்பு சித்தாந்தம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த பிரபஞ்சம் தோன்றியதைப் பற்றிய பல்வேறு சித்தாந்தங்கள் இருந்த போதிலும் இன்றைய தேதியில் விஞ்ஞானிகளால் பெருமளவுக்கு ஆதரவு பெற்ற சித்தாந்தம் பெருவெடிப்பு சித்தாந்தம் தான்.......
அதாவது பெரும் வெட்டவெளி இருளுக்குள் இருந்து ஒளி ஒரு பெரு வெடிப்பாக கதிரியக்கமாக வெளிப்பட்டு அது பல்கிப் பெருகி பின் அணுவாக,,, செல்லாக ;;;;பின் உயிராகவும் பல பொருள்களாகவும் இந்த முழுப் பிரபஞ்சமாகவும் விரிந்தது என்று பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் விளக்குகிறது இச்சித்தாந்தம்..
இதை அப்படியே வரி பிசகாமல் கருத்துப் பிசகாமல் தருகிறது அபிராமிபட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி..பாடலைக் கவனிப்போம்
"கிளியே கிளைஞர் மனத்தே கிடந்தது கிளர்ந்தொளிரும் ஒளியே
ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா வெளியே
வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே அளியேன்
அறிவின்அளவிற்கு அளவானது அதிசயமே"
கிளர்ந்தொளிரும் ஒளி = கதிரியக்க வெடிப்பு
ஒளிரும் ஒளிக்கிடமே=வெட்டவெளி
எண்ணில் ஒன்றுமில்லா வெளியே=சூனிய வெளி
வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே = பிரபஞ்சமாகவும், உயிர்களாகவும் தோன்றியவளே...
இன்னொரு பாடலில்
"ஒன்றே பலவுருவே அருவே என் உமையவளே "
மேற்கண்ட என் கருத்தை எழுத்தாளர் சுஜாதாவிற்கு அவர் கற்றதும் பெற்றதும் நான்காவது பகுதி எழுதி வந்த போது அனுப்பி வைத்திருந்தேன் ..அதை அவர் தனது கட்டுரையில் என் பெயர் விலாசம் குறிப்பிட்டு பிரசுரித்திருந்தார் என்பதை அபிராமி பட்டரின் பெருமையாகவும், என் மகிழ்ச்சியாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்
Subscribe to:
Posts (Atom)