கோழித் திருடனுக்கு
குறைந்த பட்ச
ஜெயில் தண்டனை....
ஜெயிலில்
வாரம் ஒருமுறை
கோழிக்கறி !!

செய்ததாகச் சொன்ன கொலைகள்

இருந்ததாகச் சொன்ன உலைகள்

கடைசி வரை சதாமின் கண்களில் மரணபயம்

எதுவும் கிடைக்கவில்லை அமெரிக்காவிற்கு .....

காளையைக் காயடித்து அடிமாடாக்கினோம்

கதறியது, நமக்கு வலிக்கவில்லை

வெள்ளைக்காரன் விதை நெல்லைக் காயடித்து விற்றால்

வலிக்கிறது கதறுகிறோம்.....

ஓசோன் குடையைக் கிழித்து

ஓசியாய்க் கிடைத்த

காற்றையும் நீரையும்

காசு கொடுத்து அனுபவிப்போம்

வாழ்க மானுடம்.....

யூசர்நேமும் பாசுவேர்டும் போட்டவுடன் - ஒரு கணம்

யோசித்து வாய் நெகிழும் வலைத் தாமரையே

தேடும் கருத்தையெல்லாம் ஓடாமல் ஓரிடத்தில்

பார்க்கத் தந்த உந்தன் பராக்கிரமம் வாழியவே!!!

பள்ளி கல்லூரிகளில்

கேள்வித்தாளுக்குப்

பணம் கொடுத்தோம்

பாராளுமன்றத்தில்

கேள்வி கேட்கப்

பணம் வாங்கினோம்.....

பாலையும் மோரையும் தவிர்த்து

கோக்கும் பெப்சியும் பழகினோம்

பசுவுக்குப் பாலித்தீனும் பேப்பரும் பழக்கினோம்.....

ஆடிப் பட்டம் தேடி விதை
விதைப்பவன் வயிற்றுக்கு மட்டும்
அரளி விதை..... ......
கல்லறையில் கதறும் பெண் சிசு

பால் மாறியதால்
ஐயோ
பால் மாறிப் போச்சே ....

வம்சாவளியும் அகதியும் !!!

பார்வையிலேயே வித்தியாசம் காட்டும் இச்சமூகம் பங்களிப்பு என்ன செய்துவிடப்போகிறது?

அயலான் தேசத்தில்
அசகாய சாதனை புரிந்தால்
இந்திய வம்சாவளி !

அடி உதை பட்டுத்
திரும்பி வந்தால்
அகதி !!!
வியாபார மூச்சு முட்டல்களில் இருந்து இதயத்தில் சிறை இருக்கும் சூழ்நிலைக் கைதி சுதந்திர கணேசனுக்கு உயிர் கொடுக்கும் இலக்கிய இந்ஹேலர் இந்த வலைப்பதிவு
மதுரை பேச்சியம்மன் படித்துறை பலருக்குத் தெரிந்திருக்குமா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இனி பல பிறவிகளில் என்னால் எளிமையாக அடையாளம் காட்டப்படும் உறுதி உள்ள பாண்டி மாநகரின் பல்வேறு மூலை முடுக்குகளில் குழந்தைப்பருவம் முதல் நான் குதித்தோடிய கன்னி மூலை பேச்சியம்மன் படித்துறை தான் என் அடைமொழி. மதுரை மல்லி மணம் வீசுகிறதோ இல்லையோ மதுரைத் தமிழ் மணம் நான் இப்போது வசித்து வரும் சிங்காரச் சென்னையிலும் கூட என் இதயத்துக்குள் நொடிக்கு நொடி என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.