சுவிஸ் வங்கிகள் திவாலானால் அரசியல்வாதிகள் என்ன ஆவார்கள்?

நெருப்பு என்றால் நாக்கு வெந்து விடுமா என்று கேட்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாக்கு என்ன உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வெந்து போய்விடும் போலிருக்கிறது.. அதுவும் அமெரிக்காவின் லேஹ்மான் பிரதர்ஸ், எ.என்.ஜி போன்றவை ஒரே இரவில் திவாலான விஷயங்களையும்..நம்மூர் சத்யம் ராஜுஅடித்த ஊழல் செஞ்சுரி போன்ற விஷயங்களையும் நினைத்தால் பொருளாதார உலகில் எந்த நொடி என்ன நடக்குமோ என்று நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொள்கிறது.....

நமக்கு மட்டும் அடித்துக் கொண்டால் போதுமா.. அனைவரையும் ஆட்டுவிக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சம் பிரஷர் எகிரட்டுமே என்ற நல்லெண்ணத்தினால் இந்தக் கற்பனைக் கட்டுரை.....

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் எத்தனை ஆழத்திற்கு வேர்விட்டிருக்கிறது என்பது இன்னும் உறுதிபடத் தெரியாத நிலையில் ஒரு வேளை ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்தத்தாக்குதல் மிக அதிக அளவில் இருந்து அதைத் தாக்குப் பிடிக்க கறுப்புப் பணங்கள் கோடிக்கணக்கான பில்லியன் டாலர்கள் அளவில் போட்டுவைக்கப் பட்டிருக்கும் வங்கிகள் மற்றும் அது போன்ற பிற முதலீட்டு நிறுவனங்கள் இரவோடிரவாக திவால் நோடீஸ் கொடுத்துவிட்டு ஜூட் விட்டால் அவற்றில் பல ஆயிரம் கோடிக் கறுப்புப் பணத்தைப் போட்டு வைத்திருக்கும் இந்திய பண முதலைகள் என்ன செய்வார்கள்?..திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்காது?

குறிப்பாக துட்டு அடிக்கவே அரசியலுக்கு வந்து பல்லாயிரம் கோடிகளை அங்கே பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள்?.... யாரிடம் போய் பஞ்சாயத்துப் பண்ணுவார்கள்?...இது போன்ற சூழ்நிலையில் சட்ட ரீதியான அணுகுமுறைகள் ஏதாவது இருக்கிறதா?..அப்படியே இருந்தாலும் கள்ளத் துட்டிற்கு எங்கே போய் கேஸ் போடுவார்கள்?...எப்படி இந்திய அரசை நடவடிக்கை எடுக்க வைப்பார்கள்?..உங்களில் யாருக்காவது இதற்கான தகவல்கள் இருக்கிறதா?.....ஊதற சங்கை ஊதிட்டேன்...நடந்தப்புறம் நம்மைச் சபித்து பயன் இல்லை!!!!