தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அரைக் கிரவுண்டு நிலம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதன் உரிமத்தை உங்கள் பெயரில் அரசாங்கப் பதிவுத் துறையில் பதிவு செய்துகொண்டால் தான் அது உங்களது சட்டபூர்வமான சொத்தாக மாறும். நாளை நீங்கள் விற்கும் போது வாங்குபவர் வில்லங்கம் சரிபார்க்க விண்ணப்பித்தால் உங்கள் நிலத்தின் நூறு ஆண்டு ஜாதகமே அவர் கையில் இருக்கும். இதற்கென அரசாங்கத்தில் மந்திரி, செயலாளர், துறை, கலெக்டர், ஆர்.டி.ஒ, டீ.ஆர்.ஒ, தாசில்தார், வீ.எ.ஒ என்று ஒரு பெரிய அரசாங் வலைப் பின்னலே உண்டு
சரி பல கோடி முதலீடு செய்து எடுக்கப்படும் ஒரு திரைப் படத்தை தன உரிமையாக சொத்தாக athan தயாரிப்பாளர் எங்கே பதிவு செய்கிறார்? அரசாங்கத் துறையிலா? அல்லது அதற்கென்று அரசுப் பதிவுத்துறை இருக்கிறதா? ஒரு புண்ணாக்கும் இல்லை கோடம்பாக்கத்திலேயே இந்தத் திரைப்படங்களின் கடைசி நெகடிவ் மற்றும் பாசிடிவ் முடித்துத் தரும் லபரடரிஸ் எனப்படும் பிராசசிங் கூடங்களில் தான் பதிவு செய்யப்படுகின்றது. எப்படி இவர்களுக்கென்று ஒரு சட்டாம்பிள்ளை ஏற்பாடு பாருங்கள்.
படத்தின் பல்வேறு உரிமங்கள் (ஏரியா விநியோகம், பாடல் உரிமம், தொலைகாட்சி உரிமம், வெளிநாட்டு உரிமம், டப்பிங் உரிமம், சி.டீ, வீ.சீ.டீ, இணையதள உரிமம், கப்பல், விமான உரிமம் இத்தியாதி, இத்தியாதி.....) நீண்டகாலத்திற்கோ, குறைந்த காலத்திற்கோ பலருக்கு விற்கப்பட்டாலும் படத்தின் நெகடிவ் உரிமம் மூலத் தயாரிப்பாளரிடமே இருக்கும். சமயத்தில் அதுவும் விற்கப்படும்.
சரி இவர்கள் பிரச்சனைகளில் அன்னியத் தலையீடே இருக்கக் கூடாதென்று திரைத்துறையின் எல்லாப் பிரிவுகளுக்கும் வலுவான சங்கங்கள் அமைத்து ஏகபோக சர்வாதிகாரக் கோலோச்சும் இவர்களின் தயாரிப்பாளர் சங்கங்களில் இன்று வரை முதலீட்டாளராக தொடர்ந்து செயல்பட்டு வரும் தயாரிப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவ்வப்போது பதிவு செய்யும் புதிய புதிய தயாரிப்பாளர்கள் ஒன்று திருவோடு எந்தப் போயிருப்பார்கள் அல்லது வேறு எங்காவது ஓடிப் போயிருப்பார்கள் . மற்ற எல்லாத் துறைகளின் சங்க உறுப்பினர்களும் (நிரந்தர uruppinargalaaga, காணக் கிடைப்பவர்கலாக ) கோடம்பாக்கத்திலேயே பிறந்து அநேகமாக அங்கேயே வாழ்ந்து அங்கேயே முடிந்து போவது தான் வழக்கம். ஏனென்றால் இவர்களுக்குத் தான் முதலீடு என்ற ஒரு பிரச்சனையே இல்லையே.
இவர்கள் சட்ட பூர்வமான பதிவு முறையை ஏன் அரசாங்கத்திடம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை? (நான் சொல்வது தயாரிப்பாளரின் சட்ட பூர்வமான சொத்தான திரைப்படத்தின் உரிமம் பற்றி) காரணம் இத்துறையில் தலை முதல் கால் வரையிலும் புழங்கும் கறுப்புப் பணம் தான். (வீடு மற்றும் நிலப்பதிவு முறைகளில் உங்கள் சொத்திற்கு வழிகாட்டு மதிப்புகள் இருக்கும் ஆனால் இங்கோ வழிகாட்டு மதிப்பு வீணாப் போன கதாநாயகர்களின் வரட்டுக் கவுரவம் தானே)
அரசியல் மற்றும் ஆளும் வர்க்கத்தில் இத்துறையைச் சேர்ந்தவர்களே கோலோச்சுவதால் இவர்களால் நூறு வருடங்களாக நடந்து வரும் இந்த வசதியைப் பத்திரமாக காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.
சாட்டிலைட் தொலைக் காட்சிகள் வந்த புதிதில் பல அப்பாவி தயாரிப்பாளர்கள் கோடம்பாக்க மீடியேட்டர்கள் மூலமாக அதிகார வர்க்கத்தால் வளைத்து வளைத்து கடைசி மொட்டை அடிக்கப்பட்டதைப் பார்த்த வயிற்று எரிச்சல் தான் பல நாட்கள் கழித்து இந்தப் பதிவாக வெளிப்பட்டுள்ளது. யாராவது விரும்பினால் தொடர்ந்து இதைத் தொழில் நுட்ப ரீதியாக அலசத் தயார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment