மனக் குறுகுறுப்புடன் மகளிர் தின வாழ்த்துக்கள்

பெற்றுப் போட்டவளின் மனத்தைச்
சுட்டுப் பொசுக்கிய பல கணங்கள்

நட்பு பாராட்டிய தோழிகளை புறத்தே
நயமின்றி நக்கலடித்த கணங்கள்

அலுவலகப் பெண் ஊழியர்கள்
அழும் வகையில் நடந்துகொண்ட கணங்கள்

கட்டியவளின் மீது கண்மூடிக்
கை நீட்டிய கணங்கள்

பெற்ற மகளை உள்ளத்தில்
பாரமாய்க் குமுறிய கணங்கள்

தலை முறைகள் ரத்தத்தில்
தைத்து விட்டுப் போன ஆண் என்ற அகம்பாவம்

அத்தனையும் தாண்டி அன்போடு
மகளிர் தின வாழ்த்துச் சொல்ல
மனம் குறுகுறுக்கிறது

மாற விரும்பும் மனது
கொஞ்சம் உள்ளம் மறைத்து
நடிக்க முயன்றால் காறித் துப்பும் மனசாட்சி

இருந்தாலும் மன்னியுங்கள் மகளிரே
மகளிர் தின வாழ்த்துக்கள்.........

2 comments:

நிலாமதி said...

சற்று தாமதமாக் வந்திருக்கிறேன் உங்கள் கவிதை அருமை. உணர்வுகள் வெளிப்படுகின்றன.

படித்துறை.கணேஷ் said...

அன்பின் நிலாமதி, வருகைக்கு அகமலர்ந்த நன்றிகள்.