ஆங்கிலேயர் காலத்திற்கு முன் பல சிறு கிராமங்களாக இருந்த சென்னப்பட்டினம், பல நூற்றாண்டுகளாக வியாபார நிமித்தமாகவும், அரசு நிர்வாக நிமித்தமாகவும் தற்போதைய சென்னையின் பாரிஸ் மற்றும் கோட்டைப் பகுதிகளை ஒட்டியே தலைமைப் பகுதியாக விளங்கி வந்தது, அதனை ஒட்டியே அந்தப் பகுதிகளைச் சுற்றி குடியிருப்புகள் பெருகின. தொழில்புரட்சியின் காரணமாக அம்பத்தூர், தாம்பரம் (ஸ்டாண்டர்ட்மோட்டார்,பின்னி, கிரோம்பேட் தோல் நிறுவனங்கள்) போன்ற
பகுதிகளைத் தலைமையிடமாகக் கொண்டு குடியிருப்புகள் பெருகத் தொடங்கின. பின்னர் கணினித் தொழில் நுட்பப் புரட்சியின் காரணமாக ஈ.சீ.ஆர், ஒ.எம்.ஆர் போன்ற பகுதிகளை தலைமையிடமாகக் கொண்டு புதிய குடியிருப்புகள் புற்றீசல்கள் போலக் கிளம்பி பெருகி வருகின்றன. திருப்பெரும்புதூர் பகுதியில் ஆட்டோ தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் அந்தப் பகுதியை ஒட்டி பெரும் குடியிருப்புகள் பெருகிவிட்டன. இந்த நிலையில் உண்மையில் நிலமதிப்பின் அடிப்படையில் டிமான்ட் மற்றும் அதிக விலை உடைய இடங்கள் என்பவை எது தான். பரவலாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் உண்மையிலேயே ஒரு சராசரி நிலமதிப்பு என்ன என்பது பற்றி விற்பன்னர்கள் யாராவது விளக்கமான பதிவு போட்டால் அவர்களுக்கு கோடி புண்ணியம் சேரும். ப்ளீஸ் யாராவது செய்யுங்களேன்.
No comments:
Post a Comment